முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசை மத்திய அரசின் பினாமி அரசு என போகிற இடங்களில் எல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத இ.பி.எஸ்., ஆட்சி அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் முடுக்கிவிட்டு, எட்டுத்திக்கும் தூள் கிளப்புகிறார். அதன் உச்சம் தான் காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், நெல்லை ஆகிய 4 மாவட்டங்களை பிரித்து, 5 புதிய மாவட்டங்கள் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. 2021 ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இ.பி.எஸ். அரசு, புதிய மாவட்டங்களை அவசர அவசரமாக பிரிப்பது, தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்கும் முயற்சியா என எதிர்க்கட்சிகள் கோபமாக முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர்.
இதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் குறித்து அறிந்துகொள்ள, தலைமைச் செயலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். துளியும் தயக்கமின்றி முதல்வர் இ.பி.எஸ். பா.ம.க நிறுவனர் டாகடர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை போட்டுடைத்தார். அவரின் வாதத்தை கேட்டு நாம் அதிர்ந்து போனோம். இதோ அந்த அதிகாரியின் வாக்குமூலம்.
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்த கலகத்தால், முதல்வர் நாற்காலி இ.பி.எஸ்.ஸை தேடி வந்தது. தொடக்க காலத்தில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். தி.மு.க. தலைவர்கள் உள்ளிட்டவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திககி திணறிக கொண்டிருந்தது உண்மை. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்தின் அத்தனை சூட்சுமங்களையும் தெள்ளத் தெளிவாக கற்றுக் கொண்டார். அவருக்கு ஆட்சியிலும், கட்சியிலும் சிம்ம சொப்பனமாக இருந்த ஓ.பி.எஸ்.ஸின் செல்வாக்கை குறைந்ததுடன், தினகரனையும் தவிகக வைத்துவிட்டார். அதுபோலவே, ஆட்சி கலையும் என நாள்தோறும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலினையும் துணிச்சலாக எதிர்க்க கற்றுக் கொண்டார் இ.பி.எஸ். முதலமைச்சர் நாற்காலியின் அதிகாரத்தை அக்குவேறு, ஆணிவேராக கற்றுக் கொண்ட இ.பி.எஸ். இப்போது விஸ்வரூபமாக உயர்ந்துவிட்டார்.
அவரின் கண்ணசைவு இல்லாமல், ஆட்சியின் எந்த துறையிலும் ஒரு துரும்பைக கூட கிள்ளி போட முடியாது என்பதை உளப்பூர்வமாக அறிந்து கொண்ட அனைத்து அமைச்சர்களில் இ.பி.எஸ்.ஸிடம் சரணாகதி அடைந்துவிட்டனர். ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவு அமைச்சரான மாபா பாண்டியராஜன் கூட, இ.பி.எஸ்.ஸே கதியென கிடக்கிறார். அதுபோல, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும் இ.பி.எஸ். ஆதரவு நிலையிலேயே கான்கிரீட் போல ஸ்டராங்கி நிற்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிகளும் படுதோல்வியை சந்தித்த போதும், சட்டமன்றத் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கணிசமான இடங்களில் வெற்றிப் பெற்று, ஆட்சியை ஸ்திரப்படுத்திக கொண்டதும், அதுபோலவே தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது, இ.பி.எஸ். தலைமைக்கு மகுடம் சூடியிருக்கிறது. எதிர்ககட்சியான தி.மு.க.வும், அதன் தலைவர் ஸ்டாலினும் நாள்தோறும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கூறும் புகார்களை பொதுமக்களே காமெடியாக பார்ப்பதாக நினைக்கிறார் இ.பி.எஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றிகரமாக அ.தி.மு.க. ஆட்சியை மூன்றாவது ஆண்டை நோக்கி இட்டுச் செல்லும் இ.பி.எஸ். வரும் 2021 ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிப் பெற்று முதல்வர் நாற்காலியே தொடர வகுககும் வியூகங்களில் ஒன்றுதான் புதிய மாவட்டங்கள் பிரிப்பு. இ.பி.எஸ்.ஸின் ராஜதந்திரத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் பச்சைக் கொடி காட்டியிருப்பதுதான், இ.பி.எஸ்.ஸின் கூடாரத்தை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. கொங்கு மண்டலமும், வட மண்டலமும் ஒத்த கருத்தில் ஒருங்கிணைந்துள்ளதால், 2021ம் ஆண்டின் துவக்கத்தில் தமிழ்நாடு இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கான ஆயத்தப் பணிகளை இப்போது இருந்தே தொடங்கி விட்டது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. டிசம்பர் மாதம் முடித்து பிறககும் 2020 ம் ஆண்டு தமிழகத்தில் அரசியல் வாண வேடிக்கைகள் தூள் கிளப்பும். பிரதமர் மோடியின் வியூகத்தை நிறைவேற்றும் சாரதியாக முதல்வர் இ.பி.எஸ்.ஸூம் அதிரடி காட்டுவார், என்றார் நீண்ட பெருமூச்சுடன் அந்த அதிகாரி.
இ.பி.எஸ்.ஸின் வியூகங்களின் பின்னால் டாக்டர் ராமதாஸ் இருக்கிறாரா- கேள்விகளை அடுக்கினோம், பா.ம.க. மூத்த தலைவர் ஒருவரிடம். அவர் சிரித்துக் கொண்டே விஷயங்களை கொட்டத் தொடங்கினார்.
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இருந்த காலத்திலேயே தனது மகன் டாகடர் அன்புமணியை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகுப் பார்க்க வேண்டும் என துடித்தவர் எங்கள் தலைவர் டாக்டர் ராமதாஸ். ஆனால், அந்த இரண்டு ஆளுமைகளுமே ராமதாஸின் உள்நோக்கத்தை தெளிவாக அறிந்து இருந்ததால், தேர்தல் நேரத்தின் போது மட்டும் அவரை மாறிமாறி பயன்படுத்தி கொண்டனர். அப்போதெல்லாம், குடும்ப சுயநலத்தை கருத்தில் கொள்ளாமல், கொள்கைகளை அடகு வைக்காமல் கம்பீரமாக பா.ம.க. வை வழிநடத்தியிருந்தால், இன்றைக்கு அசைக்க முடியாத தலைவராக டாக்டர் அன்புமணி உயர்ந்து நின்றிருப்பார். ஆனால், கட்சியை விட தங்களது குடும்பமே பெரிது என்ற உணர்வில் இருந்த ராமதாஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் மீறி தனது மகனை முதலமைச்சராக்க முடியாது என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்டார்.
கடந்த காலங்கள் கசப்பான பல பாடங்களை கற்பித்த போதும், அன்புமணியின் முதலமைச்சர் பதவி மீதான ஆசைக்கு தொடர்ந்து தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அந்த பேராசைக்காக 32 மாவட்டங்களைக் கொண்ட தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும். அதுவும் வன்னியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களை உள்ளடக்கி புதிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார் ராமதாஸ்.
ஆனால், அப்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்ததால், அவரது வேண்டுகோள் காற்றில் கரைந்து போனது. ஆனால், தற்போது தனது வேண்டுகோளையெல்லாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி நிறைவேற்றி வைக்கும் இ.பி.எஸ். காலத்தில் நிறைவேற்றி கொள்ள சபதம் எடுத்துவிட்டார் ராமதாஸ். அதனால், பா.ம.க.வின் அடிப்படை கொள்கைககு எதிராக மதசார்ப்பற்ற இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுககு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்.
அவரின் ஒரு ஆசை, தனது மகனான அன்புமணியை மத்திய மந்திரியாகக வேண்டும். 2021 ககுப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்பதுதான். முதல்வர் நாற்காலி மீது ஒருசேர குறி வைத்திருக்கும் இ.பி.எஸ்., பா.ம.க. டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரின் உள்ளக்கிடங்கை புரிந்து கொண்ட பிரதமர் மோடி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பா.ஜ.க. ஆட்சியை தமிழகத்தில் அமைத்திட திட்டம் வகுத்துள்ளாராம்.
அவரின் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப தான், பெரிய மாவட்டங்களை இரண்டாக பிரிக்கும் அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து அதிரடி காட்டி வருகிறார் இ.பி.எஸ்.
காஞ்சிபுரத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு ஊர்களையும் தலைமையிடமாக கொண்டு இரண்டு புதிய மாவட்டங்களும், நெல்லையைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய மாவட்டங்களுடன் சேர்ந்து தமிழகத்தில் 37 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் எண்ணிககையின் மூலம் பெரிய மாநிலமாக உள்ள தமிழகத்தை, வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக டெல்லி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு முதல்வர் இ.பி.எஸ்.சும் சம்மதித்துவிட்டார். இந்த ரகசிய திட்டம் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் சூசகமாக தெரியும் என்பதால் தான், அ.தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்ப தயங்குகிறார்கள். வட தமிழகத்தில் வன்னியர்களும், இ.பி.எஸ். சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தான் பெரும்பான்மையாக உள்ளனர். சென்னை முதல் நீலகிரி வரை புதிததாக அறிவிககப்பட்டுள்ள மாவட்டங்களையும் சேர்த்து 20 மாவட்டங்கள் வருகின்றன.
இந்த மாவட்டங்களில் சுமார் 150 எம்.எல்.ஏ. தொகுதிகள் உள்ளன. அதனால், வன்னியர்களும், கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் ஓர் அணியில் நின்றால், இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி முதலமைச்சர் பதவியை அலங்கரிககலாம் என்பதுதான் இ.பி.எஸ். மற்றும் ராமதாஸ் இடையேயான ரகசிய ஒப்பந்தம். இந்த இருவரின் ஆசைகளை அறிந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்துகிறாராம்.
வட மாநிலத்தை இ.பி.எஸ். ராமதாஸுடம் ஒப்படைத்துவிட்டால், எஞ்சியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி அல்லது மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழகத்தை புதிய மாநிலமாக அறிவித்துவிடலாம். அந்த மாவட்டங்களில் தேவர், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், முதற்கட்டமாக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். தலைமையில் புதிய அரசை உருவாக்கி விடலாம். பின்னர் அவரை பா.ஜ.க கட்சியில் சேர்த்து தமிழகத்தில் தாமரையை மலரச் செய்து, தந்தை பெரியார் மண் என கொந்தளிககும் திராவிட, தமிழர் அரசியல்வாதிகளின் குரல் வளையை, போர்க்குரலை முடக்கிவிடலாம் என நினைக்கிறதாம் மத்திய பா.ஜ.க. அரசு. அதாவது தமிழர்கள் விரல்களை கொண்டே தமிழர்கள் கண்களை குத்தும் வேலையில், பக்கா பிளானோடு மத்திய பா.ஜ.க. அரசு காய் நகர்த்தி வருகிறது. அதை நோக்கி தான் அ.தி.மு.க. ஆட்சி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. வரும் ஆண்டில் அதற்கான காய் நகர்த்தல்கள் விரைவாக நடக்கும். அதை தமிழகமும், அ.தி.மு.க. கட்சியும் எப்படி எதிர்கொள்ளும் என்ற அச்சம் தான், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிப் பிடிப்போடு இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களிடமும் எழுந்துள்ளது என்றார் அந்த அதிகாரி.
தமிழகம் இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக கூறுகள் இருக்கிறதா தி.மு.க. மூத்த நிர்வாகியிடம் கேட்டோம். தனது உள்ளக் குமறல்களை ஒரே மூச்சாக கொட்டினார்.
“அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலமும், முதல்வர் இ.பி.எஸ்.ஸின் பாய்ச்சலை பார்ககும் போது, தமிழகத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் தான் எங்களிடமும் எழுந்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் சொல்படி தான் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள பாமரனுக்கு கூட புரிந்து இருக்கிறது. நீட் தேர்வு, இந்தி திணிப்பு, வடமாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு என மாநில சுயாட்சிககு எதிராக நடக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிககிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். ஆனால், சாதி அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ள, இரண்டு சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு, தங்கள் ஆயுள் வரை ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க காய் நகர்த்தி வருவதும் எங்களுக்குத் தெரியும். அவர்களின் சதிராட்டத்தை முறியடிக்கும் சக்தி, தி.மு.க. தலைமையிலான தோழமைக் கட்சிகளுக்கு இருந்தாலும், தமிழர்களின் பண்பாட்டை, சுயமரியாதையை, மொழியுணர்வை கண்டு ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள், தமிழகத்தை கூறுபோட எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
ஆனால், அவர்களின் ரகசிய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. ஆலய வழிபாடுகளில் ஆர்வம் காட்டும் பெரும்பான்மையான தமிழர்கள், மதசாயத்தை தமிழகத்தில் பூச முற்பட்டால், ஒருபோதும் ஆன்மிக அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதை துணிந்து எதிர்ப்பார்கள் என்பதற்கு அண்மைகால உதாரணம், திருவள்ளுவருக்கு காவி நிறம் பூச முயன்று தோற்றுப் போன சம்பவத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளலாம். மாநில சுயாட்சி உணர்வுகள் தலைதூக்கி நிற்கும் தமிழர்களிடம் மாநில பிரிப்பு சாத்தியப்படாது என்பதை வரும் ஆண்டுகளில் பா.ஜ.க. தலைவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
தமிழகத்தை இரண்டாக பிரிக்க அச்சாரம் - மோடி மேஜிக் பலிக்குமா